அய்யா அன்பான வணக்கங்கள்
எனது "உள்ளது நாற்பது" நூலுக்கு தங்களது விமர்சனத்தை இணையதளத்தில் இப்பொழுதுதான் பார்க்க நேர்ந்தது. அதுவும் நிறைய அன்பர்கள் தங்களது விமர்சினத்தை பார்த்து தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்ட பிறகுதான், புத்தகம் கோரிய அன்பர்கள் அனைவருக்கும் கொரியர் மூலம் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. பகவானுடைய கருத்தை பரவலாக எடுத்துச் செல்வதில், விமர்சனம் மூலம் தாங்கள் பங்களிதுள்ளமைக்கு எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெருவித்துக்கொளிகிறேன். கிருஷ்னமூர்த்தியின் பெயர் கருத்து வழங்கியவர்கள் பட்டியலில் விடுபட்டுபோனதை சுட்டிக்காட்டியுள்ளது சரிதான். கிருஷ்னமூர்த்தியும் பகவானும் ஒத்த கருத்துள்ளவர்கள் என்பது என்கருத்து. சொற்கள் வேறாக இருக்கலாம் சொல்லிய கருத்து ஒன்றுதான். கிருஷ்னமூர்த்தியின் வாசிப்பில் பெற்ற தெளிவே நான் பகவான் ரமணரிடம் ஆழ்ந்துபோவதர்க்கு முக்கிய காரணம். அவருடைய கருத்து நூலில் நிறைய இடங்களில் ஒப்புமையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளது ஒன்றுதான் என்கிறபொழுது உணர்ந்தவர்களில் உணர்வும் ஒன்றாகத்தானே இருக்கவேண்டும். உணர்வு ஒன்றாக இருக்கும்பொழுது கருத்துமட்டும் மாறுபட முடியுமா? மீண்டும் ஒருமுறை நன்றிகூறி அமைகிறேன்.
நலம் வாழ்க
அன்புடன் ஆ. சிதம்பரகுற்றாலம்
மிக்க நன்றி ஐயா...
பதிலளிநீக்குதங்கள் பணி தழைத்தோங்க வாழ்த்துகள்...
நன்றியுணர்வுடன்,
பாஸ்கர்