இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ஞானி பகவான் ரமணர். பேதங்களற்று பரிபூரண ஆனந்தத்தில் நிலைத்து நின்றவர். சமய சடங்குகளையோ, தத்துவ சித்தாந்தங்களையோ அவர் போதிக்கவில்லை. அறியாமையை அகற்றி உள்ளதை அறிவதுதான் ஞானம் என்றார். அதற்காக இரண்டு ஆயுதங்களைக் கொடுத்தார். அவை "நான் யார்?, 'நான்' எங்கிருந்து வருகிறது?". சுய தேடல் தான் அது. அதன் விளக்கமே இந்நூல். "ஆனந்தம், தேடி அடையும் பொருளல்ல, நமது இயல்பே அதுதான். நாம் எதுவாக இருக்கிறோமோ அதை அதுவாக அறிவதுதான் ஞானம்" என்கிறார்.
"தேடவேண்டிய பொருள் வெளியில் இல்லை. உள்ளே உள்ள பொருளுக்கு வெளியில் இருந்து யாரும் உதவ முடியாது. பயிற்றுவிப்பவர்கள் இறுதிவரை பயிற்ச்சியாளர்தான். சீடர்கள் இறுதிவரை சீடர்தான். இவர்களால் உண்மையை உணரமுடியாது. உலகெங்கும் புது புதுச் சீடர்களைத் தேடுவதிலேய பயிற்சியாளர்களின் காலம் முடிந்து விடுகிறது. சீடர்களோ தன்னை ஒருவரிடம் அடகு வைத்துவிடுவதால் சுய தேடலின்றி சொல்லிக் கொடுக்கப்பட்டதில் அடங்கிவிடுகின்றனர். "கீறல் விழுந்த கிராமபோன் தட்டுப் போல சொன்னதையே திரும்பத் திரும்ப செய்வதால் மனம் மந்த கதி அடைகிறது", என்கிறார் கிருஷ்ணமூர்த்தி. இவர்கள் உண்மையிடமிருந்து ஒதுங்கிச் செல்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஞானிகளின் நிலை வேறு. அவர்களிடம் சங்கல்பம் என்பது இல்லை. நிறைந்த நீர் நிலையாக இருந்தனர். வந்தவர்கள் தேவைகேற்ப பருகிச் சென்றனர். அங்குப் பயிற்சிக்கு இடமில்லை. மாறாக நம்மை விழிப்படையச் செய்கிறார்கள்.
"ஒருவர் எவ்வளவுதான் கற்றறிந்தவராக இருந்தாலும், ஆன்மீகவாதியாக இருந்தாலும் உங்கள் விளக்கில் அவரால் ஒளியேற்ற முடியாது. அது நீங்கள் மட்டுமே" என்கிறார் கிருஷ்ணமூர்த்தி. அதனால்தான் பகவான் ரமணரும் வழிமுறைகள் எதையும் சொல்லவில்லை.சுயமுயர்ச்சியே சுயத்தில் சேர்க்கும் என்றார். ஆன்மிகம் எது என்ற தெளிவு இருந்தால் மட்டுமே நீங்கள் சரியான வழியில் பயணிக்க முடியும். இந்தத் தெளிவையே நமது மறைநூல்கள் "விவேகம்" என்கின்றன. அந்த விவேகத்தை, தெளிவை பெறுவதற்க்கான முயற்ச்சிதான் "நான் யார்?" நூல். தொடர்ந்து பகவான் ரமணரின் ஆக்கங்களுக்கான விளக்க உரைகளும் வர உள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக