செவ்வாய், 25 மார்ச், 2014

அன்பர்களே நீண்ட இடைவேளைக்குப் பிறகு நான் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பல்வேறு நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க நான் எழதிய ஐந்து புத்தகங்களை இங்கே வலை பதிவு செய்துள்ளேன். தங்களின் மேலான கருத்துக்களை என்னோடும் பகிர்ந்துகொள்ளலாமே.










2. அன்பே அருளே -  பகவான் ரமணரின் வாழ்க்கைச் சரிதம்












நன்றி.
















செவ்வாய், 17 செப்டம்பர், 2013

நான் யார்?

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ஞானி பகவான் ரமணர். பேதங்களற்று பரிபூரண ஆனந்தத்தில் நிலைத்து நின்றவர். சமய சடங்குகளையோ, தத்துவ சித்தாந்தங்களையோ அவர் போதிக்கவில்லை. அறியாமையை அகற்றி உள்ளதை அறிவதுதான் ஞானம் என்றார். அதற்காக இரண்டு ஆயுதங்களைக் கொடுத்தார். அவை "நான் யார்?,  'நான்' எங்கிருந்து வருகிறது?". சுய தேடல் தான் அது.  அதன் விளக்கமே இந்நூல். "ஆனந்தம், தேடி அடையும் பொருளல்ல, நமது இயல்பே அதுதான். நாம் எதுவாக இருக்கிறோமோ அதை அதுவாக அறிவதுதான் ஞானம்" என்கிறார்.

"தேடவேண்டிய பொருள் வெளியில் இல்லை. உள்ளே உள்ள பொருளுக்கு வெளியில் இருந்து யாரும் உதவ முடியாது.  பயிற்றுவிப்பவர்கள் இறுதிவரை பயிற்ச்சியாளர்தான். சீடர்கள் இறுதிவரை  சீடர்தான். இவர்களால் உண்மையை உணரமுடியாது. உலகெங்கும் புது புதுச் சீடர்களைத் தேடுவதிலேய பயிற்சியாளர்களின் காலம் முடிந்து விடுகிறது. சீடர்களோ தன்னை ஒருவரிடம் அடகு வைத்துவிடுவதால் சுய தேடலின்றி சொல்லிக் கொடுக்கப்பட்டதில் அடங்கிவிடுகின்றனர். "கீறல் விழுந்த கிராமபோன் தட்டுப் போல சொன்னதையே திரும்பத் திரும்ப செய்வதால் மனம் மந்த கதி அடைகிறது", என்கிறார் கிருஷ்ணமூர்த்தி. இவர்கள் உண்மையிடமிருந்து ஒதுங்கிச் செல்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஞானிகளின் நிலை வேறு. அவர்களிடம் சங்கல்பம் என்பது இல்லை. நிறைந்த நீர் நிலையாக இருந்தனர். வந்தவர்கள் தேவைகேற்ப பருகிச் சென்றனர். அங்குப் பயிற்சிக்கு இடமில்லை. மாறாக நம்மை விழிப்படையச் செய்கிறார்கள்.

"ஒருவர் எவ்வளவுதான் கற்றறிந்தவராக இருந்தாலும், ஆன்மீகவாதியாக இருந்தாலும் உங்கள் விளக்கில் அவரால் ஒளியேற்ற முடியாது. அது நீங்கள் மட்டுமே"  என்கிறார் கிருஷ்ணமூர்த்தி. அதனால்தான் பகவான் ரமணரும் வழிமுறைகள் எதையும் சொல்லவில்லை.சுயமுயர்ச்சியே சுயத்தில்  சேர்க்கும்  என்றார்.  ஆன்மிகம்  எது என்ற தெளிவு இருந்தால் மட்டுமே நீங்கள் சரியான வழியில் பயணிக்க முடியும். இந்தத் தெளிவையே நமது மறைநூல்கள் "விவேகம்" என்கின்றன. அந்த விவேகத்தை, தெளிவை பெறுவதற்க்கான முயற்ச்சிதான்  "நான் யார்?" நூல். தொடர்ந்து பகவான் ரமணரின் ஆக்கங்களுக்கான விளக்க உரைகளும் வர உள்ளன.














நலம் வாழ்க 

அன்புடன் ஆ. சிதம்பரகுற்றாலம்


சனி, 9 பிப்ரவரி, 2013

அய்யா அன்பான வணக்கங்கள்

எனது "உள்ளது நாற்பது" நூலுக்கு  தங்களது விமர்சனத்தை இணையதளத்தில் இப்பொழுதுதான் பார்க்க நேர்ந்தது. அதுவும் நிறைய அன்பர்கள் தங்களது விமர்சினத்தை பார்த்து தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்ட பிறகுதான், புத்தகம் கோரிய அன்பர்கள் அனைவருக்கும் கொரியர் மூலம் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. பகவானுடைய கருத்தை பரவலாக எடுத்துச் செல்வதில், விமர்சனம் மூலம் தாங்கள் பங்களிதுள்ளமைக்கு எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெருவித்துக்கொளிகிறேன். கிருஷ்னமூர்த்தியின்  பெயர் கருத்து வழங்கியவர்கள் பட்டியலில் விடுபட்டுபோனதை சுட்டிக்காட்டியுள்ளது சரிதான். கிருஷ்னமூர்த்தியும் பகவானும் ஒத்த  கருத்துள்ளவர்கள் என்பது என்கருத்து. சொற்கள் வேறாக இருக்கலாம் சொல்லிய கருத்து ஒன்றுதான். கிருஷ்னமூர்த்தியின் வாசிப்பில் பெற்ற தெளிவே நான் பகவான் ரமணரிடம் ஆழ்ந்துபோவதர்க்கு முக்கிய காரணம். அவருடைய கருத்து நூலில் நிறைய இடங்களில் ஒப்புமையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளது ஒன்றுதான் என்கிறபொழுது உணர்ந்தவர்களில் உணர்வும் ஒன்றாகத்தானே இருக்கவேண்டும். உணர்வு ஒன்றாக இருக்கும்பொழுது கருத்துமட்டும் மாறுபட முடியுமா? மீண்டும் ஒருமுறை நன்றிகூறி அமைகிறேன்.

நலம் வாழ்க 

அன்புடன் ஆ. சிதம்பரகுற்றாலம்